
இலங்கையில் வளர்ச்சி கண்ட ஸ்தூபிகளின் அமைப்பு முறையானது தமிழ்நாடு-கேரளப் பிரதேசங்களை ஒத்தும் இந்தியாவுக்குரிய தனித்துவம் வாய்ந்த வகையிலும் அமைந்திருந்ததனை கலை வரலாற்றாசிரியர்கள் எடுத்தக்காட்டியுள்ளனர். அவ் அடிப்படையில்
பௌத்த சமயம் மகிந்த தேரரால் பரப்பப்பட முன்னரே ஸ்தூபிகளின் தேற்றம் ஏற்பட்டு விட்டதென வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுவது அவதானிக்கத்தக்கதாகும்.https://www.youtube.com/watch?v=JBcQx2Vl9i8 ஊதாரணமாக மகியங்கனை, களனி, நாகதீபம் மிகிந்தலையிலுள்ள கண்டக சேத்தியம் ஆகிய இடங்களில் காணப்படும் காலத்தால் முற்பட்ட ஸ்தூபிகளின் அமைப்பு இலங்கைக்குரிய தனித்துவமான கலை பாரமபரியத்தை காட்டுகின்றது. சிறப்பாக மிகிந்தலையிலுள்ள கண்டக சேத்தியம் கி.மு 4ஆம் நூற்றாண்டுக்குரியது என தொல்லியலாளர்கள் துணிபு.www.badriseshadri.in/2011/06/blog-post_06.html
அந்தவகையில் அநுராதபுர காலம் கட்டப்பட்ட சில முக்கிய ஸ்தூபிகளை நோக்கும் போது தேவநம்பிய தீஸன் காலத்தில முதன் முலாக ஸ்தூபிகள் அமைக்கப்பட்டன. அவ்வாறு அமைக்கப்பட்ட தூபராம ஸ்தூபியே
![]() |
தூபராம |
தேவநம்பிய தீஸனின் தம்பியும் அவன் பின் ஆட்சி பெற்றவனுமாகிய உத்தியனால் (கி.மு 207-197) அம்பத்தல சைத்தியம் கட்டப்பட்டது. இது குரவனான மகிந்தனின் சாம்பலை வைத்து கட்டப்பட்டது.
![]() |
மிரிசவட்டிய |
துட்டகாமினியால் கட்டப்பட்ட மிரிசவட்டிய ஸ்தூபி எச்சங்களை ஏந்திய துட்டகாமினி மன்னனின் செங்கோல் மீது வைத்து கட்டப்பட்டது. பண்டைய நாளில் 200 அடியுடனும் தற்போது 168 அடியுடனும் காணப்படுகின்றது. கஜபாகு இதனை பெருப்பித்தான் என்பர்.
ருவன்வெலிசாய எனப்படும் மககாதூபி இவனது அரியதொரு தொண்டாகும். முதன் முதலாக இராமகாமவில் இருந்த தூபின் எச்சங்களை இத் தூபி கொண்டுள்ளது என கருதப்படுகின்றது. இதனுடைய தள விட்டம் 294 அடியாகவும் 300 அடி உயரம் கொண்டதாகவும் காணப்படுகின்றது. இதனை கட்டி முடித்தவன் சத்தாதீஸன்.
![]() |
அபயகிரி |
இலங்காரமயை இதனைத் சுற்றி பழங்கால தூண்களின் அழிபாடுகள் காணப்படுவதைக்கொண்டு அக் காலத்தில் இத் தாதுகோபுரத்தை மூடி வட்டதாகே எனப்படும் ஒரு வட்டவடிவிலான கட்டடம் இருக்கக் கூடும் என தெரிகின்றது. தாதுகோபுரத்தை சூழவுள்ள மேடை நிலத்திலிருந்து 10 அடி உயரத்தில் உள்ளது, விட்டம் 45 அடி, சூழவுள்ள மேடையின் விட்;டம் 1332 அடி கெண்டது. சிலசோப கந்தக்க பழைய பெயர்.
மகா தாடிக மகாநாகனால் மிகிந்தலை மகாதூபமும் கண்டக சேத்தியமும் கட்டப்பட்டது. அநுராதபுர கால பண்டைய பெருங்கட்டுநருள் இறுதியானவரான மகாசேனனால் ஜேத்தவனராம என அழைக்கப்படும் இலங்கையின் பெரிய தூபியை கட்டினான். இதன் அடி விட்டம் 367 அடியும் உயரம் 400 அடியுமாகவுள்ளது.
அநுராதபுர கால இலங்கையின் ஸ்தூபிகளின் கட்டடக் கலை ரீதியான அமைப்பினை அடிப்படையாகக் கொண்டு அதன் தனித்துவமான வளர்ச்சி நிலையினை கலை வரலாற்று ஆசிரியர்கள் எடுத்துக்காட்டுவர். கி.பி 10ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுயை உள்ளடக்கிய இக் கட்டத்தில் இரு வேறுபட்ட நிலைகளில் ஸ்தூபிகளின் கட்டடக் கலை ரீதியான வளர்ச்சி நிலைகள் நோக்கப்படுகின்றன. சேனக பண்டாரநாயக்க தனது Sinhalese monastic Architecture என்ற நூலில் அவ் வளர்ச்சி நிலைகளை 2 பிரிவுகளாக வகுத்து நோக்கியுள்ளார்.
1.கி.பி 6ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஸ்தூபிகள்.
2.கி.பி 6ஆம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட ஸ்தூபிகள்.
பௌத்த வழிபாட்டுச் சின்னங்களில் இடம்பெறும் மிக முக்கியமான ஒரு கூறாகவும் தேரவாத பௌத்த பிரிவின் ஒரு குறியீடாகவும் விளங்கும் ஸ்தூபி கி.பி 6ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நிலையில் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் கும்மட்ட வடிவில் மிகச் சிறிய தோற்றத்துடன் அமைக்கப்பட்டன. ஆனால் காலப்பேக்கில் மிகவும் பிரமாண்டமான தோற்றப்பாட்டினை பெற்றுக்கொண்டு இலங்கையின் தனித்துவத்தை பேணி நின்றன. இந் நிலையில் ஸ்தூபியினுடைய அமைப்பு முறையானது வட இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டது என்ற பரணவிதானவின் வாதம் இன்று வலு இழந்த நிலைக்கு தள்ளப்பட்டு தென்னிந்தியாவில் கிருஸ்ணா நதிப் பள்ளத்தாக்கில் மலர்ச்சியடைந்த அமராவதி கலையம்சங்களே இலங்கையின் ஸ்தூபி அமைப்பில் பெரும் செல்வாக்கினை ஏற்படுத்திருந்ததனை காணமுடிகின்றது.
அந்தவகையில் ஸ்தூபிகளின் அமைப்பிலே பிரதான அம்சங்களாக
1.தளம்
2.கும்மட்டம் (வில் மாடம்)
3.மேற்கோப்பு
4.வாகல் கட
5.சேதியகரம் என்பன காணணப்படுகின்றன.
தளம்
அநுராதபுரகால ஸ்தூபிகளின் தளத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக உயர்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்;ட படிகள், கைபிடி வரிசைகள், காவல் சிலைகள், சந்திரவட்டக்கல் காணப்படுகின்றன. மூன்று அடுக்குடைய அடித்தளங்களளை கொண்டிருந்தன. அடித்தளத்தில் முதலாம் சுற்றுப்பிரகாரம் அமைந்திருக்கும். அப் பிரகாரத்தை சுற்றி கட்டப்பட்ட சுவர் வேதிகை எனப்படும். வேதிகைக்கு வெளியே உள்ள வெளியை இரண்டாம் சுற்றுப்பிரகர்ரம் எனலாம். அடித்தளத்தின் மேல் அண்டம் அமைக்கப்படும.;
கும்மமட்டம்
தளத்தின் மேலுள்ள கும்மட்டம் என்ற பகுதி குமிழி, நெற்போர், முட்டை வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. இதனையே தாபகத்தின் முக்கிய பாகம் என்பர். இதன் வெளிப்பாகம் செங்கற்கள் பதிக்கப்பட்டு பின் சுண்ணாம்பு பூசப்பட்டிருந்தன. ஆ.பௌச்சர் அவர்கள் பௌத்த அறிவுறைகளிற் பன்முறையும் அழுத்தியேத்தப்பட்ட உலகின் நிலையாமையையும் குமிழி வடிவம் குறியீட்டு முறையில் உயர்ந்த வகையில் எடுத்துக்காட்டுகின்றது என்கின்றார்.
மகா தூபியினதும் அநுராதபுரத்திலும் இலங்கையின பிற பாகங்களிலும் காணப்படும் பெருமளவுடைய தூபிகளினதும் கும்மட்டம் ஒன்றின் மேல ஒன்றாகக் கட்டப்பட்ட மூன்று வட்ட வடிவிலான தொற்றிகளும் காணப்படுகின்றன. இவை இந்தியாவில் மோதி எனப்பட்டவாறு இலங்கையில் பெயர் கொள்ளப்படவில்லை. இவற்றை மகாவம்சம் புப்பாதன எனும் பாலிப் பெயரால் சுட்டும்;. இச் சொல் மலர் இடும் இடம் என பொருள் கொள்ளும். ஆதி நாட்களில் பற்றுறுதியுடன் வணங்க வருவோர் தூபிகட்கு காணிக்கையாகக் கொண்டு வரும் மலர்களை இடுவதற்கு இத் தொற்றிகளை பயன்படுத்தினர் என்பதை இச் சொல் காட்டுகின்றது. இலங்கையில் பல தூபிகளில் இத் தொற்றிகள் செங்கல்லாலனது. அவற்றுள் அநுராதபுரத்திலுள்ள மிருசவட்டிய சிறப்பானது.
மேற்கோப்பு
அநுராதபுர கால ஸ்தூபிகளில் கும்மட்டத்திற்கு மேலமைந்த பகுதியான மேற்கோப்பு மிக்க வளர்ச்சி பெற்றது. இவ் மேற்கோப்பு ஐந்து அங்கங்களை உடையதாக கட்டப்படுகின்றது. கும்மட்டத்திற்கு மேலமைந்த பகுதி ஹதரஸ் கொட்டுவ அல்லது சதுர கோட்டடம் எனப்படும். அப் பீடத்தின் மேலுள்ள பகுதி தேவதா கொட்டுவ எனப்படும். அதன் மேலுள்ள பகுதி கொத்ஹறல்ல எனப்படும். இதன் மேல் சத்த அல்லது குடை எனப்படும் பகுதியும் அதன் மேல் சிகரம் எனப்படும் கறல்ல அமைக்கப்பட்டிருக்கும்.
அநுராதபுரத்திலுள்ள பெருந் தூபிகளுள் அபய கிரி மட்டுமே அநுராதபுரத்து பிற்பருவத்தில் அதன் நோக்கு எவ்வாறு இருந்தது என உணர்த்துமளவுக்கு மேற்கோப்பினை இன்றும் நன்னிலையில் கொண்டுள்ளது. ஜேத்தனவுமு; சென்ற அரை நூற்றாண்டு வரை மேற்கோப்பினை நன்னிலையுடன் பேணி வந்துள்ளது. பின்னர் திரு பெல்லின் மேற்பாரவையில் கட்டப்பட்டது.
வாகல்கட
அநுராதபுரத்திலுள்ள பெருந் தூபிகளுள் பல நாற்றிசைகளிலும் வாயில்களை நோக்கிய பத்திரிப்புக்களையும் முனைப்புக்களையும் கொண்டுள்ளன. இவற்றை முன்னங்கடை என்பர். இதை இக்கால சிங்கள மொழியில் வாகல்கட என்பர். அநுராதபுரத்து மூன்று பொரும் தூபிகளிலும் உள்ள வாகல்கடை பெருமளவு இடிபாட்டுடனே உள்ளன. மிருசவெட்டிய வாகல்கடை நன்னிலையிலுள்ளது. சிற்பியல் நோக்கில் இவ் வாகல்கட இலங்கைத் தூபிகளின் உறுப்புக்களில் மிக முக்கியமானவை. ஏனெனில் இவை தீவின் உருவமைக் கலைக்குரிய ஆதி எடுத்துக்காட்டுக்களாய் உள்ளன. ஸ்தூபிகளின் நான்கு புறமும் மேடைக்கு ஏறி வருவதற்கென கட்டப்பட்ட வாயில்களும் உண்டு. இவை சிற்பக்கலை வளர்ச்சிக்கு உதவின.
சேத்தியகர
ஸ்தூயின் ஸ்தாபிதம் ஆரம்பத்தில் இலங்கையில் தென் இந்திய பாணியில் அமைந்திருந்தாலும அடுத்தநிலையில் அது இங்கு தனித்துவமான முறையில் வளர்த்தெடுத்துச் செல்லப்பட்டது என்பதற்கு சேத்தியகர சிறந்த எடுத்துக்காட்டாகும். இது தூபகர அல்லது வட்டதாகே எனப் பொதுவாக அழைக்கப்படும். அநுராதபுர கால சேத்தியகரத்தினுடைய முக்கிய கூறுகளான உயர்ந்த வட்டவடிவான மேடை, அதன் மையத்தில் அமைந்துள்ள வட்ட வடிவானதான கும்மட்டமான அண்டம், தூண் வரிசைகள் என்பன காணப்படுகின்றன.santhu11.blogspot.com/2014/12/blog-post_5.html
பௌத்தம் பரவிய பின்னரே அழியாத தன்மை கொண்ட கட்டடங்கள் உருவாகின. ஆனாலும் இவை முற்றிலும் கல்லாலானவையாக இருப்பதில்லை. மேற்கோப்பு பெரும்பாலும் மரம் போன்ற அழியும் பெருட்களால் ஆனவை. எனவே தான் இத் தூபிகள் முழுமையாகப் பேணப்படாது சிதைவடைந்து போயின.
உசாத்துணைகள்
க. நவரத்தினம்: இலங்கையின் கலை வளர்ச்சி: 2007: குமரன் புத்தக இல்லம்: பக் 22-28.
பரணவிதகண.செ: இலங்கைத் தூபி- தொகுதி 5: 1964: இலங்கை அரச கரும மொழி திணைக்களம்: பக் 1-130
p.sagikka
3rd year archaeology student
university of jaffna.
Good
ReplyDelete