ஆனைக்கோட்டை |
இலங்கையில் வரலாற்றுக்காலத்துக்கான ஆக்க அடிப்படைகளை இட்டுக்கொடுத்த வகையில் பெருங்கற்காலம் சிறப்பிடம் பெறுகின்றது. கற்கால வாழ்விலருந்து பெற்ற அநுபவங்களை கொண்டு தம்மை வளப்படுத்தி பிற்பட்ட காலங்களுக்குரிய பல்வேறுபட்ட பண்பாட்டு அம்சங்களுக்குரிய அடித்தளம் இட்டுக்கொடுத்ததோடு ஒரு கட்டமைக்கப்பட்ட கலைப் பண்பாட்டை உருவாக்கியவ்கள் என்ற வகையில் பெருங்கற்கால மக்கள் சிறப்பிடம் பெறுகின்றனர். பெருங்கற்கால மக்களின் சமய நம்பிக்கைகானவை உருவ வழிபாடுகளாகி உருவ வெளிப்பாடுகள் இடம்பெற கலை வளர்ச்சியடைந்தன.
கந்தரோடை, |
Megalithig periad என அழைக்கப்படும் இப் பண்பாடானது இலங்கையில் ஏறத்தாழ கி.மு 800- கி.மு 1ஆம் நூற்றண்டுவரை நிலவியதாக கந்தரோடை, பொம்பரிப்பு, கெடிகே ஆகிய இடங்களில் பெறப்பட்ட விஞ்ஞானபூர்வமான ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இப் பெருங்கற்கால பண்பாடானது ஏறத்தாழ இலங்கையில் 40 இற்கு மேற்பட்ட இடங்களில் நிலவியதனை இப் பண்பாண்டு அடையாளச் சின்னங்களான ஈமச்சின்னங்கள், குடியிருப்புக்கள், குளங்கள் வயல்கள், என்பன அடையாப்படுத்துகின்றன. www.noolaham.net/project/01/33/33.txtஇவ்வகையில் கந்தரோடை, ஆனைக்கோட்டை, மாந்தை, பூநகரி, பொம்பரிப்பு, அக்குறுகொட, அநுராதபுரம், மாமடுவ போன்ற இடங்கள் குறிப்பிடத்தக்கவை. இவ் இடங்களில் இப் பண்பாடானது இடத்துக்கிடம் வேறுபட்ட காலங்களில் தோன்றியிருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
இவை யாவும் பெருங்கற்காலத்தில் கட்டடக் கலையின் உருவாக்கத்தினையும் அதன் படிப்படியான வளர்ச்சி நிலையினையும் பிற்கால கட்டடங்கள் அதாவது கோயில்கள், விகாரங்கள் என்பன உருவாக்கப்படவும் அடிப்படையாக அமைந்தது என்றால் மிகையாகாது. தொழில்நுட்பங்களை முதன் முதலாக அறிமுகப்படுத்தி குளம், குளக்கட்டு, அணைக்கட்டு, போன்ற கட்டுமான கலையை வளப்படுத்தி பிற்காலம் தலம், தீர்த்தம் எனப்பட்ட இந்துக் கோயில்கள், பௌத்த ஸ்தூபி கலைகள் அமைக்கப்படவும் இக் கால கலை அடித்தளமானது.
சுடுமண் சிற்பங்கள், சிலைகளும் உருவாக்கப்பட்டன. தென் மாகாணத்தின் பண்டத்தாரா எனும் இடத்தில் பெருங்கற்கால ஈமச் சின்னங்களிற் சுடுமண் சவப்பெட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனோடு தப்போவ எனும் இடத்தில் ¼ ஏக்கர் நிலத்தில் இருவகைப் பருமனில் அமைக்கப்பட்ட யானை உருவச் சவப்பெட்டிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தம்மடுவவிலும் மனித, விலங்குடன் கூடிய சுடுமண் சவப்பெட்டிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. கந்தரோடையில் இக் கால பௌத்த சிற்பங்கள் தலையற்ற நிலையில் கிடைத்துள்ளன. வெண் வைரக் கல்லாலான புத்தர் சிலைகள் அமராவதிக் கலை மரபை எடுத்துக்காட்டுகின்றன.
இக் கால கலை நுட்பத்தின் சிறப்பான அம்சமாக அமைவது இக் கால மக்களால் பயன்படுத்தப்பட்ட மணி வகைகள், ஆபரணங்கள், அவற்றுள் கை வளையல்கள் கழுத்து மாலைகள், உலோக காற்சலங்கைகள் என்பன கலை ரீதியாக கொண்ட ஆர்வத்தை சுட்டுகின்றது. கந்தரோடையில் காப்புக்கள், மோதிரங்கள், காதணிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.
மட்பாண்டங்களில் காணப்படும் கிராபிடிக் குறியீடுகள் வளர்ச்சியடைந்து பிராமி எழுத்தாக தோற்றம் பெற்றன. எழுத்துக்கலை கட்டமைக்கப்பட்ட காலமாக காணப்படுகின்றது.
உலோகக் கலையும் வளர்க்கப்பட்டது. இதற்கான காரணம் இரும்புப் பயன்பாடு ஏற்படுத்தப்பட்டமையாகும். கந்தரோடையில் கண்டெடுக்கபட்ட காப்புக்கள், மோதிரங்கள், காதணிகள் பெருமளவு உலோகத்தால் செய்யப்பட்டன. மேலும் திஸ்ஸமகாராமமையில் ஈய உலோகத் துண்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்
பெருங்கற்கால மக்கள் மத்தியில் மிகை உற்பத்தி காணப்பட்டதால் ஓய்வு நேரத்தில் பல கலைப் படைப்புக்களை உருவாக்கியிருந்தனர். இவ் கலை வடிவங்களுக்கு வித்திட்டவை ஈமத்தாழிகள், கற்படுக்கைகள், கல்லறைகள், கற்திட்டை, என்றால் மிகையாகாது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டடக் கலை, சிற்பம், ஓவியம் போன்ற கலைகள் கட்டமைக்கப்பட்டதோடு பிற்கால கலை உருவாக்கத்திற்கு வித்திட்ட காலமாக பெருங்கற்காலம் விளங்குகின்றது.
உசாத்துணைகள்
இந்திரபாலா.கா, இலங்கையில் தமிழர், 2006, குமரன் புத்தக இல்லம், பக் 88-142.
கிருஷ;ணராஜா.செ, இலங்கைப் பண்பாட்டுப் பரிணாமத்தின் அடிப்படைகள், AB Creator and publishers; 2012, பக் 155-202.
P.sagikka
3rd year Archaeology student
University of Jaffna.
உசாத்துணைகள்
இந்திரபாலா.கா, இலங்கையில் தமிழர், 2006, குமரன் புத்தக இல்லம், பக் 88-142.
கிருஷ;ணராஜா.செ, இலங்கைப் பண்பாட்டுப் பரிணாமத்தின் அடிப்படைகள், AB Creator and publishers; 2012, பக் 155-202.
P.sagikka
3rd year Archaeology student
University of Jaffna.
No comments:
Post a Comment