
இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட கால ஓவியங்களானவை ஜரோப்பிய புராதன நினைவுச் சின்னங்கள் அளவுக்கு உயர் தரத்தைப் பெறாவிட்டாலும் இச் சித்திரங்கள் மூலம் ஆதி மனிதரின் வாழ்க்கைத் தகவல்களை அறியக்கூடியனவாகவுள்ளன. இவர்கள் வரைந்துள்ள மனிதர், பிராணிகளின் வடிவங்கள் குழந்தைச் சித்திரஙங்களை ஒத்துள்ளன. முனித வடிவங்கள் நேராகவும் பிராணிகளின் வடிவம் பக்கப்பாட்டாகவும் வரையப்பட்டுள்ளன. பொரும்பாலும் தாம் வேட்டையாடும் பிராணிகளான உடும்பு, மயில், எருது, முதலை போன்ற பிராணிகளையும் அடிக்கடி சந்திக்கின்ற யானைகளையும் வீட்டு செயற்பாடு, வேட்டையாடல், யானையின் மேல் பிரயாணம் செய்யும் மனிதர்களையும் குறியீடுகளாக இரேகை மூலம் வரைந்துள்ளனர்.
இது போன்ற வரலாற்றுக்கு முற்பட்ட கால ஓவியங்கள் காணப்படும் கற் குகைகள் பல இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ன. https://ta.wikipedia.org/.../பலாங்கொடை_மனிதன...தந்திரி மலை, வட்டதொம்ப குகை, கொண கொள்ள குகை, இராஐ கல்கந்த குகை, கந்துறு பொக்கு;ண குகை, திம்புலாகல, குடும்பிக்கல், உறாகந்த, பில்லவ, ஆண்டியாகல, பட்ட தொம்பற குகை, பிகில்ல கொட குகை, கொறவக்க குகை என்பன சிலவாகும்.https://www.youtube.com/watch?v=O69wEUWf0x4
அநுராதபுரத்தில் மல்வத்து ஓயாவுக்கு அண்மையில் தந்திரிமலை விகாரைப் பூமியில் தந்திரிமலை குகை உள்ளது. இலங்கையில் மிகப் பழமையான ஓவியங்கள் இங்குள்ளன. இது முக்கியம் பெறுவது இங்குள்ள புராதன வரலாற்றுக்கு முற்பட்ட கால ஓவியத்தாலே ஆகும். இங்கு அதிகமாக இரேகை மூலம் வரையப்பட்டுள்ளன. இரேகைச் சித்திரங்களுக்கிடையில் வர்ணம் பூசப்பட்ட சித்திரங்கள் உள்ளன. பிராணிகள் சிலவற்றுக்கு தட்டையாக வர்ணம் பூசப்பட்டுள்ளது. சிவப்பு, கறுப்பு, புள்ளியிடப்பட்ட புலியும், உடும்பு, எருது, மயில், முதலை ஆகிய பிராணிகளும் மேல் ஏறிச்செல்லும் மனிதர் போன்ற சித்திரங்களும் வரையப்பட்டுள்ளன. இவை ஆதி மனிதனின் எண்ணக்கருக்கள், அவர்களது அன்றாட வாழக்கை நிகழ்வு பற்றிய பல தகவல்களை இச் சித்திரங்கள் மூலம் அறியலாம். பெரும்பாலும் ஆதி மனிதனின் வேட்டையாடலை குறிப்பனவாகவே இவ் தந்திரிமலை குகை ஓவியங்கள் காணப்படுகின்றன.
அடுத்து இராஐகல் கந்தகல் குகை ஓவியங்களை நோக்கும் போது இது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளது. இங்கு இரேகை மூலம் பிராணிகள், மனித வடிவங்கள் வரையப்பட்டுள்ளன. இவ் மாவட்டத்திலேயே கந்துறுபொக்கண குகைச் சித்திரங்கள் முன்னேற்றமாகவும் பெரியதாகவும் உள்ளன. விரல் நுனியினால் தட்டையாக வர்ணம் பூசப்பட்டுள்ளன. மான், யானை, மரை, உடும்பு போன்ற பிராணிகளை இனங்கண்டுகொள்வது எளிதாகவுள்ளது. பல்வேறு மெய் நிலைகளில் காணப்படுகின்றன.
பட்டதொம்ப பிரதேசத்தில் செய்யப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளின் போது இங்கு கி.மு 2800-1600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதி மனிதர்களின் தகவல்கள் பல கிடைத்துள்ளன. பிராக் யுகத்துக்குரிய இக் குகை இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட பிரதேசத்தில் உள்ளது. இவற்றின் ஊடாக வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்களின் இருப்பை அறியலாம்.
கேகாலை மாவட்டத்தில் வறக்காபொலவுக்கு அண்மையில் மலதெனிய தோட்டத்தில் அமைந்துள்ளது தொறவக்க குகை. இரண்டு மலைகளுக்கிடையில் இயற்கையாக இக் குகை அமைந்துள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்G.S,Rபிரவுணி என்பவரே யானையும் குட்டியும் என்ற ஓவியத்தை கண்டுபிடித்தார். யானைக் கல் எனப்படும் கல்லிலே இவ் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. இதனை விட இரண்டு உடும்புகளைக் கொண்ட ஓவியம் ஒன்றும் காணப்படுகின்றுத. இங்கு யானையினுடைய உருவமானது நில மட்டத்திலிருந்து 6 ½ அடி உயரமாக இயற்கையா குகைச் சுவரில் வரையப்பட்டுள்து. இவ் ஓவியங்கள் கற் பாறையில் கூரான பொருளினால் அடையாளமாகக் கீறியே வரையப்பட்டுள்ளது. சூரியன் சந்திரன் உருவமும் வரையப்பட்டுள்ளது.
அநுராதபுர மாவட்டத்திலுள்ள பில்லாவ குகையினை நோக்கும் போது இங்கு சுவர்களில் இரேகையை பயன்படுத்தி வரையப்பட்ட யானை வடிவத்தினைக் காணலாம். இச் சித்திரங்களுக்கிடையில் கலப்பூடகச் சித்திரங்களும் உள்ளன. வீடு ஒன்றின் உள்ளே இருக்கும் மனித வடிவங்கள் மிகச் சிறபப்பாக வரையப்பட்டுள்ளன. எருது, மயில் மேல் ஏறிச் செல்லும் மனித வடிவங்களும் வரையப்பட்டுள்ளன. சங்கோத குறியீடு, மாடு போன்ற விலங்குகளும் வரையப்பட்டுள்ளன.
பிசில் கொட குகையியில் ஆண், பெண் உருவங்கள், முதலை போன்றனவும் தேன் சேகரிக்கும் பாத்திரங்களும் ஓவியங்களாகவுள்ளன. இது அம்பாறை மாவட்டத்தில் உள்ளது.
இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட கால ஓவியங்கள் பற்றிய ஆராய்ச்சி இன்னமும் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. www.archaeology.gov.lk/web/index.php?option...id... இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட கால ஓவியங்கள் கொண்ட இடங்கள் பல பிரதேசத்திலும் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் கால நிர்ணயம் செய்ய முடியவில்லை. கலை அறிஞர்கள் பல விதமாக கருத்துக்களை சொன்ன போதிலும் கற் பாறையில் கீறப்பட்ட சித்திரங்களில் கீறியுள்ள உருவங்கள், அளவு, ஊடகம், பாவித்த உபகரணம் குறியீட்டு பாவனை முறை சார்ந்த ஆய்வுக்கு இன்னமும் உள்ளடக்கப்படவில்லை. பாகியன் கல குகையில் கண்டுபிடிக்கப்பட்ட பலாங்கொட மனிதனின் மண்டையோடு, எலும்புகள் போன்றவை குருகல்லை அரைத்துச் சிவப்புச் சாயம் பூசப்பட்டுள்ளன. இவ் எலும்புக் கூடு 29000 வருடங்களுக்கு முற்பட்டது. இக் கால ஓவியங்கள் யாவும் அபிவிருத்தியடைந்த கலை வெளிப்படாகக் கருதமுடியாதவையாகக் காணப்பட்ட போதிலும் இலங்கையின் பிற்பட்ட கால ஓவியங்களுக்கு அடிப்படையாக விளங்கியதோடு அக் கால மக்களின் ஓர் இருப்பு முறையினை வெளிப்படுத்தியதோடு மக்களின் வாழ்வு முறையினை வெளிப்படுத்துவதாக இவ் இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட கால ஓவியங்கள் விளங்குகின்றன.
உசாத்துணைகள்
நவரத்தினம்.க, இலங்கையின் கலை வளர்ச்சி, 1954, ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீடு, பக் 50-53.
சுற்குணராஜா.ஏ, இலங்கைக் கலை, 2013, எஸ் பதிப்பகம், பக் 161-165.
p.sagikka
3rd year archaeology student
university of jaffna.
No comments:
Post a Comment