Sunday, July 2, 2017

சங்ககால காசுகள்

Image result for சங்ககால நாணயம்       சங்ககாலம் தமிழர்களின் பொற்காலம். சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களில் முதலில் ஆய்வு செய்யப்பட்ட புறநானுறு என்ற நூலில் பல வரலாற்றுச் செய்திகள் இருப்பதைக் கண்ட வரலர்ற்றாசிரியர்கள் சங்க கால மன்னர்கள் பற்றியும் அவர்கள் ஆண்ட பகுதிகளையும் அவர்கள் ஆண்ட பகுதிகள் குறித்தும் ஆய்வு செய்ய தொடங்கினர். அதன் அடிப்படையில் சங்ககால மன்னர்கள் நாணயங்களை வெளியிட்டனரா? ஏன்ற கேள்வி எழுந்தது. பல வரலாற்று ஆசிரியர்கள் சங்ககால மன்னர்கள் குறுநில மன்னர்களாகவே இருந்தனர் என்றும் அவர்கள் காசு வெளியிடும் அளவிற்கு வலுப்பெற்றிருக்கவில்லை என்றும் அக் காலகட்டத்தில் வட நாட்டில் செல்வாக்குடன் ஆட்சி செய்த மௌரியப் பேரரசு வெளியிட்ட வெள்ளி முத்திரை நாணயங்களே தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்தது என்னவும் குறிப்பிட்டனர். இந்த குழப்ப நிலை சங்க காலம் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் 1886 ஆம் ஆண்டு கிடைத்ததிலிருந்து நீங்கியது.

       முத்திரைக் காசுகளை அடுத்து தமிழ் நாட்டில் நமக்கு கிடைப்பவை சங்ககால காசுகளேயாகும். கிரேக்க, உரோம நாடுகளோடு தமிழ் நாடு கொண்ட வணிக உறவை சங்க இலக்கியங்கள் விரிவாக கூறுவதால் கி.மு 3ஆம் நூற்றாண்டுடன் சங்க காலம் தொடங்குகின்றது என அறிஞர்கள் கருதுகின்றனர்.https://ta.wikipedia.org/.../சங்ககாலத்_தமிழக_நா...
     தமிழ் நாட்டில் சங்ககாலத்தை சார்ந்தனவாக கிழ்வரும் காசுகள் குறிப்பிடப்படுகின்றன.
        1.சதுர நீள் வடிவான செப்புக்காசுகள்.
        2.பெருவழுதிக் காசுகள்.
        3.ஆண்டிப்பட்டிக் காசுகள்.
        4.மாக்கோதைக் காசுகள்.
        5.கொல்லிப்பொறைக் காசுகள்.
        6.குட்டுவன் கோதைக் காசுகள்
      மன்னன் உருவம் பொறிக்கப்படாத சதுர நீள் சதுர வடிவ சோழருடைய செப்புக்காசுகளில் முன்புறம் யானையும் பின்புறம் புலியும் சேரருடைய காசுகளில் முன்புறம் யானையும் பின்புறம் பனை மரமும் பாண்டியருடைய முன்புறம் யானையும் பின்புறம் மீன் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றை வைத்தே சங்ககால நாணயங்கள் இனங்காணப்பட்டன. மங்கலக் குறியீடுகளான ஸ்வஸ்திகா, மத்தளம், திருமலு போன்ற உருவங்களும் சிறு உருவங்களும் காணப்படும். இக் காசுகளில் சில கி;மு 2ஆம் நூற்றர்டு அல்லது கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனஇரா.கிருஸ்ணமூர்த்தி கருதுகின்றார்.Image result for சங்ககால நாணயம்
      பெருவழுதி எனப் தமிழ் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட நாணயங்களில் காணப்படுகின்ற 'பெருவழுதி' என்ற பெயர் சங்ககாலப் பாண்டியனின் பெயர். புறநானூற்றிலும் இப் பெயர் காணப்படுகின்றது. இந் நாணயம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே சங்ககாலம் மன்னன் பெயர் பொறிக்கப்பட்ட காசு வெயிவந்திருக்கின்றது என்பதை வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர்.
      இக் காசுகளின் முன் பக்க்தில் வலப்பக்கம் திரும்பிய நிலையில் உள்ள மன்னன் தலையும் பின் பக்கம் நீள் சதுர வடிவிலான தொட்டியினுள் ஆமைகள் காணப்படுகின்றன. இன்னொன்றில் வேலியிடப்பட்ட மரமும் காணப்படுகின்றன. இக் காசுகளில் மீன் உருவம் காணப்படாதுவிட்டாலும் இதனை பாண்டிய மன்னர்கள் வெளியிட்டிருக்கலாம் என இரா.கிருஸ்ணமூர்த்தி கருதுகின்றார். மேலும் இவ்வாறு தலை பொறித்த காசுகள் வெளியிடும் மரபானது கிரேக்கத்துடுன் கொண்ட தொடர்பால் ஏற்பட்டது எனவும் கொள்ளப்படுகின்றது.https://www.youtube.com/watch?v=if8sRfn4P98
        உருவம் பொறிககப்படாத பெருவழுதி மற்றும் ஆண்டிப்பட்டி காசுகளின் காலம் கி.மு 4ஆம் 3ஆம் நூற்றாண்டாகக் கொள்ளப்படுகின்றது. மற்றும் மாக்கோதை, கொல்லிப்பொறை, குட்டுவன் கோதை காசுகளின் காலம் கி.மு 2ஆம் 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகின்றது. மாக்கோதை, கொல்லிப்பொறை, குட்டுவன் கோதை ஆகிய காசுகள் சங்ககால சேர மன்னர்களுக்குரியதாகவே இனங்காணப்பட்டுள்ளது. காசின் விளிம்பில் கொல் இப் புறை என்ற பெயர் தமிழ் பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.
        சங்க கால சேரக் காசுகளில் வட்ட வடிவமான இரண்டு வெள்ளிக் காசுகளில் ஒன்றில் மாக்கோதை என்றும் மற்றொன்றில் குட்டுவன் கோதை என்றும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளன. மாக்கோதை என்று பெயர் பொறிக்கப்பட்ட காசிலே முன் புறம் வலப்பக்கம் பார்த்த நிலையிலே மன்னனின் உருவம் உள்ளது. மன்னரின் தலையில் உரோமானியப் போர் வீரர்கள் அணியும் கவசம் உள்ளது. தெளிவான நீண்ட மூக்கு உள்ளது. தலையின் மேல் தமிழ் பிராமி எழுத்தில் மாக்கோதை என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. உரோமானியப் பேரரசர்  'அகஸ்டஸ்' வெளியிட்டட வெள்ளி நாணயத்தினை உருக்கி மாக்கேர்தை காசுகளை அச்சடித்தார்கள் என்பது ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது. ஆகையால் இக் காசின் காலம் கி.மு 1ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலம் அல்லது கி.பி 1ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலமாகவோ இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.Image result for சங்ககால குட்டுவன் கோதை நாணயம்
           குட்டுவன் கோதை எனப் பொறிக்கப்பட்ட காசில் வலப்பக்கம் பார்த்த நிலையில் மன்னரின் உருவம் உள்ளது. https://chemozhi.wordpress.com/.../குட்டுவன்-கோத... - உரோமானியப் போர் வீரர்கள் அணியும் கவசத்தை அணிந்துள்ளனர். நீண்ட மூக்கும், அழகிய காதும் கழுத்தில் பட்டை போன்ற அணிகலன்களையும் அணிந்திருப்பதையும் காணலாம். மன்னரின் தலையின் மேல் குட்டுவன் கோதை என தமிழ் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இதில்  ;ன்' என்ற எழுத்து தலைகீழக உள்ளது. இக் காசில் தான் முதன் முதலில் புள்ளியிடும் முறையைக் காணலாம். இந்தக் காசின் காலம் கி.பி முதல் அல்லது இரண்டாவது நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.
Image result for சங்ககால நாணயம்         சோழருடைய நாணயங்களை நோக்கின் பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்கள் இதுவரை கிடைக்கவில்லை. எனினும் அவர்களும் நாணயங்களை வெளியிட்டனர் என்பதற்கான காசுகள் கிடைத்துள்ளன. இவர்களின் காசின் முன் புறத்தில் யானை, வேலியிடப்பட்ட மரம் என சில சின்னங்களும் பின் புறம் பெரும்பாலும் புலிச் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இக் காசுகளின் காலம் கி.மு முதல் அல்லது இரண்டாவது நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.
         சங்ககால தமிழகத்தின் சில பகுதிகளைச் சிற்றரசர்கள் ஆண்டனர். அவர்களில் மலையமான்கள் திருக்கோவிலூர் பகுதியை ஆண்டவர்கள். இவர்கள் வெளியிட்ட செப்புக் காசுகள் திருக்கோவிலுக்கு அருகே ஓடும் தென் பொண்ணை ஆற்றுக்கருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் எழுத்துள்ள காசுகள் வெளியிட்டுள்ளனர் என்பது தெரியவருகின்றது. இக் காசில் காணப்படும் எழுத்துக்கள் குறித்து தொல்லியல் அறிஞர்களிடையே கருத்து வேற்றுமை நிலவி வருகின்றது. இவர்களுடைய நாணயங்களிலே முக்கிய சின்னமாக குதிரையும் பின் புறம் ஆற்றுச் சின்னமும் காணப்படுகின்றது. இக் காசுகள் கி.மு முதல் நூற்றாண்டு முதல் கி.பி முதல் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதிக்குள் இருக்கலாம் என கருதப்படுகின்றது.
உசாத்துணைகள்
நடன காசிநாதன், தமிழர் காசு இயல், 2003, உலக தமஜழாராய்ச்சி நிறுவனம்-தரமணி சென்னை, பக்15-22
kallarperavai.weebly.com/2970296930212965-296530062994298...


p.sagikka
3rd year archaeology student
university of jaffna.

No comments:

Post a Comment

இலங்கையில் ஒரு கட்டமைக்கப்பட்ட கலைப் பண்பாட்டை உருவாக்கியவர்கள் ஆதி இரும்புக்கால மக்களே ஆவார் இக் கூற்றின் பொருத்தப்பாட்டை ஆராய்க.

ஆனைக்கோட்டை  இலங்கையில் வரலாற்றுக்காலத்துக்கான ஆக்க அடிப்படைகளை இட்டுக்கொடுத்த வகையில் பெருங்கற்காலம் சிறப்பிடம் பெறுகின்றது. கற்கால வா...