மனித நாகரிக வரலாற்றில் நாணயங்களின் தோற்றம் புதிய காலகட்டதை குறித்து நிற்கின்றது. இலங்கையை பொறுத்தவரை நாணயந்களின் தோற்றம் வளர்ச்சி இந்திய நாணயங்களின் வரலகற்றோடு இணைத்த ஒன்றாகும். இலங்கை வரலாற்றை அறிய உகவும் மூலாதாலங்களில் ஒன்றான நாணயங்கள் பற்றி ஆராய்ந்தவர்களை நோக்கும் போது 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து இலங்கையில் கிடைத்த நாணயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. இதைத் தொடக்கி வைத்தவர்களில் ஜரோப்பியர் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் உயர் பதவியில் இருந்த ஆங்கிலேயருக்கு முக்கிய பங்குண்டு. முதன் முதலில் பிறின்செப் என்ற அறிஞர் தான் 1858 இல் இந்தியக் தொல்பொருளில் பற்றிய தொகுப்பில் இலங்கையில் கிடைத்த பல்வேறு காலப்பகுதிக்குரிய நாணயங்கள் பற்றி ஆராய்ந்துள்ளனர்.
இதில் யாழ்ப்பாண அரசு கால நாணயங்கள் உட்பட்ட சில தமிழ் நாணயங்களுக்குரிய புகைப்படங்களை கட்டுரையில் பிரசுரித்த போதிலும் தமிழ் மொழியில் பயிற்சியில்லாத காரணத்தால் அவற்றை அவரால் அடையாளப்படுத்த முடியவில்லை. இதே காலப்பதியில் தான் ராய்டேவிட், பெல், வில்லியம் கைகர், ஸ்ரில் போன்ற அறிஞர்களும் இலங்கையின் பல வட்டாரங்களில் கிடைத்த பல வகை நாணயங்களை ஆராய்ந்து பல கட்டுரைகளை வெளியிட்டனர்.www.dinamalar.com › ... › தமிழ்நாடு
கி.பி 1885 இல் வட இலங்கையில் முல்லைத்தீவில் கிடைத்த கிடைத்த நாணயங்கள் பற்றி பாக்கரும் கி.பி 1917 இல் கந்தரோடையில் கிடைத்த நாண நாணயங்கள் பற்றி பீரிஸ்சும் ஆராய்ந்ததைத் தொடர்ந்து இலங்கை நாணயங்கள் பற்றிய ஆய்வில் வட இலங்கை நாணயங்களும் முக்கியம் பெறுகின்றன. கி.பி 1924 இல் கொட்றிங்டனால் பிரசுரிக்கப்பட்ட The Ceylon coins currency என்ற நூல் இலங்கை நாணய வரலாறு பற்றிக் கூறும் முதல் நூலாகும். இது போன்ற ஓர் நூல் இதுவரை வெளிவரவில்லை.https://ta.wikipedia.org/wiki/தமிழ்ப்_பிராமி
மேலும் முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர், ரோசிரியர் இந்திரபாலா, பேராசிரியர் பத்மநாதன் போன்றோரும் ஆய்வை மேற்கொண்டனர். மாதோட்டத்தில் கிடைத்த மூன்று வகை நாணயங்களை ஆராய்ந்த சாசனவியல் அறிஞரான மகாதேவன் அவற்றை அரிய நாணயங்கள் என குறிப்பிட்டு யாழ்ப்பாண மன்னர்கள் சேது மொழி பொறித்த நாணயங்களுடன் வேறு பல நாணயங்களையும் வெளியிட்டிருக்கலாம் என கூறுகின்றார். பேராசிரியர் சிவச்சாமியின் யாழ்ப்பாணக் காசுகள், பேராசிரியர் கிருஸ்ணராஜாவின் யாழ்ப்பாண குடா நாட்டில் கிடைத்த நாணயங்கள் என்ற ஆய்வுக் கட்டுரைகளும் திரு சேயோனின் இலங்கையில் கிடைத்த பண்டைய கால நாணயங்கள் என்ற நூலும் பேராசிரியர் புஷ்ரட்ணத்தின் இலங்கைத் தமிழரின் பண்டைய கால நாணயங்கள் என்ற நூலும் நாணயப் பயன்பாட்டை வட்டார அடிப்படையில் கூற எழுந்த ஆய்வுகள் என கூறலாம்.
உசாத்துணைகள்
https://ta.wikipedia.org/wiki/சேது_நாணயம்
https://ta.wikipedia.org/.../தொல்லியல்_நோக்கி...
p.sagikka
3rd year archaeology student
university of jaffna.
p.sagikka
3rd year archaeology student
university of jaffna.
No comments:
Post a Comment