Tuesday, July 4, 2017

இலங்கையில் ஒரு கட்டமைக்கப்பட்ட கலைப் பண்பாட்டை உருவாக்கியவர்கள் ஆதி இரும்புக்கால மக்களே ஆவார் இக் கூற்றின் பொருத்தப்பாட்டை ஆராய்க.

Image result for இலங்கையில் பெருங்கற்காலம்
ஆனைக்கோட்டை
 இலங்கையில் வரலாற்றுக்காலத்துக்கான ஆக்க அடிப்படைகளை இட்டுக்கொடுத்த வகையில் பெருங்கற்காலம் சிறப்பிடம் பெறுகின்றது. கற்கால வாழ்விலருந்து பெற்ற அநுபவங்களை கொண்டு தம்மை வளப்படுத்தி பிற்பட்ட காலங்களுக்குரிய பல்வேறுபட்ட பண்பாட்டு அம்சங்களுக்குரிய அடித்தளம் இட்டுக்கொடுத்ததோடு ஒரு கட்டமைக்கப்பட்ட கலைப் பண்பாட்டை உருவாக்கியவ்கள் என்ற வகையில் பெருங்கற்கால மக்கள் சிறப்பிடம் பெறுகின்றனர். பெருங்கற்கால மக்களின் சமய நம்பிக்கைகானவை உருவ வழிபாடுகளாகி உருவ வெளிப்பாடுகள் இடம்பெற கலை வளர்ச்சியடைந்தன.

Sunday, July 2, 2017

இலங்கையில் நாணயவியல் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள்

Image result for இலங்கை பிராமி நாணயங்கள்
             மனித நாகரிக வரலாற்றில் நாணயங்களின் தோற்றம் புதிய காலகட்டதை குறித்து நிற்கின்றது. இலங்கையை பொறுத்தவரை நாணயந்களின் தோற்றம் வளர்ச்சி இந்திய நாணயங்களின் வரலகற்றோடு இணைத்த ஒன்றாகும். இலங்கை வரலாற்றை அறிய உகவும் மூலாதாலங்களில் ஒன்றான நாணயங்கள் பற்றி ஆராய்ந்தவர்களை நோக்கும் போது 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து இலங்கையில் கிடைத்த நாணயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. இதைத் தொடக்கி வைத்தவர்களில் ஜரோப்பியர் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் உயர் பதவியில் இருந்த ஆங்கிலேயருக்கு முக்கிய பங்குண்டு. முதன் முதலில் பிறின்செப் என்ற அறிஞர் தான் 1858 இல் இந்தியக் தொல்பொருளில் பற்றிய தொகுப்பில் இலங்கையில் கிடைத்த பல்வேறு காலப்பகுதிக்குரிய நாணயங்கள் பற்றி ஆராய்ந்துள்ளனர்.

சங்ககால காசுகள்

Image result for சங்ககால நாணயம்       சங்ககாலம் தமிழர்களின் பொற்காலம். சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களில் முதலில் ஆய்வு செய்யப்பட்ட புறநானுறு என்ற நூலில் பல வரலாற்றுச் செய்திகள் இருப்பதைக் கண்ட வரலர்ற்றாசிரியர்கள் சங்க கால மன்னர்கள் பற்றியும் அவர்கள் ஆண்ட பகுதிகளையும் அவர்கள் ஆண்ட பகுதிகள் குறித்தும் ஆய்வு செய்ய தொடங்கினர். அதன் அடிப்படையில் சங்ககால மன்னர்கள் நாணயங்களை வெளியிட்டனரா? ஏன்ற கேள்வி எழுந்தது. பல வரலாற்று ஆசிரியர்கள் சங்ககால மன்னர்கள் குறுநில மன்னர்களாகவே இருந்தனர் என்றும் அவர்கள் காசு வெளியிடும் அளவிற்கு வலுப்பெற்றிருக்கவில்லை என்றும் அக் காலகட்டத்தில் வட நாட்டில் செல்வாக்குடன் ஆட்சி செய்த மௌரியப் பேரரசு வெளியிட்ட வெள்ளி முத்திரை நாணயங்களே தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்தது என்னவும் குறிப்பிட்டனர். இந்த குழப்ப நிலை சங்க காலம் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் 1886 ஆம் ஆண்டு கிடைத்ததிலிருந்து நீங்கியது.

Saturday, July 1, 2017

இலங்கையினுடைய ஓவியக் கலை வரலாற்றில் வரலாற்றுக்கு முட்பட்ட கால ஓவியங்கள்



      கட்டடக் கலை, சிற்பக்கலை முதலியவற்றுக்கு எவ்விதம் இலங்கை புகழ் பெற்றிருந்ததோ அவ்விதம் ஓவியக் கலையிலும் புகழ் பெற்றிருந்தது. இலங்கையின் புராதன வரலாற்றுக்கு முற்பட்ட கால தகவல் கி.மு 2850 வரை உள்ளது. அக் காலத்தில் வாழ்ந்த ஆதி கால மனிதர் தம் மகிழ்ச்சியின் பொருட்டும் பொழுது போக்கிற்காகவும் தாம் வாழ்ந்த குகைச் சுவர்களில் ஓவியம் வரைந்துள்ளனர். வர்ணங்களின் பொருட்டு கரி, வெண் களி,  வர்ணக் களி, பிராணிகளின் இரத்தம், வெள்ளைக்கல் என்பனவற்றை பயன்படுத்தினர். இத்தகைய வரலாற்றுக்கு முற்பட்ட கால ஓவியங்களானவை பின் வந்த காலங்களுக்கு முன்னோடியாக அமைந்தத மட்டுமன்றி மக்களின் வாழ்வு, பண்பாடு, நாகரிகம், குடியிருப்பு போன்றஅம்சங்களை வெளிப்படுத்துவனவாகவுள்ளன.

     

Friday, June 30, 2017

அநுராதபுர கால தூபி கட்டடக்கலை மரபின் பிரதான அம்சங்கள்

           
             பொதுவாக தென்னனாசியவில் ஸ்துபிகளின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஆராய்ந்த கலை வல்லுநர்கள் அதனை பௌத்த மதத்தின் தோற்றத்திற்கு முற்பட்ட கால எல்லைக்கு எடுத்துச் செல்வதனை அவதானிக்க முடிகின்றது. புராதன புதைகுழி முறையிலிருந்தே இத்தகைய ஸ்தூபிகள் உருவாக்கம் பெற்று பிற்காலத்தில் வணக்கத்துக்குரிய கூறுகளாக பரிணமம் பெற்றன என்பது பரணவிதானவின் கருத்தகும். சுhதாரண மக்களது வாழ்வில் புதைகுழிகள் அல்லது நடுகல் வழக்கம் இருந்து வந்ததை வரலாற்றுக்கு முற்பட்ப கால தொல்லியல் ஆய்வுகள் நன்கு நிறுவும்.

இலங்கையில் ஒரு கட்டமைக்கப்பட்ட கலைப் பண்பாட்டை உருவாக்கியவர்கள் ஆதி இரும்புக்கால மக்களே ஆவார் இக் கூற்றின் பொருத்தப்பாட்டை ஆராய்க.

ஆனைக்கோட்டை  இலங்கையில் வரலாற்றுக்காலத்துக்கான ஆக்க அடிப்படைகளை இட்டுக்கொடுத்த வகையில் பெருங்கற்காலம் சிறப்பிடம் பெறுகின்றது. கற்கால வா...